News January 9, 2026

தஞ்சை: தோஷங்கள் நீங்க இத பண்ணுங்க!

image

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் அமைந்துள்ள ஹர சாப விமோசன பெருமாள் கோயில் ஆன்மீகச் சிறப்புகள் நிறைந்த ஒரு புண்ணியத் தலமாகும். சிவனின் தோஷத்தையே போக்கிய தலம் என்பதால், எத்தகைய கடுமையான தோஷங்களாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டால் அவை விலகி, வாழ்வில் நன்மைகள் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 11, 2026

சத்துணவு பணியாளர்களுக்கு திமுகவினர் ஆதரவு

image

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு சத்துணவு பணியாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியருக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சரவணன் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்

News February 11, 2026

பேராசிரியர்களுக்கு அதிமுகவினர் ஆதரவு தெரிப்பு

image

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியர்கள் இன்று வகுப்பறை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், UGC நிர்ணயித்த ரூ.57,800 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சரவணன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

News February 11, 2026

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை

image

எங்களது தொழிற்சங்கம் போராடி கொண்டிருப்பதால் தற்போது மாதாந்திர சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே நிர்வாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஜனவரி மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!