News December 8, 2025
தஞ்சை: திருமணத்தில் நகை திருடிய நபர் கைது

திருவாரூரை சார்ந்த பாஸ்கர் தனது சகோதரி மகளின் திருமணத்திற்காக தஞ்சாவூரில் நடைபெறும் திருமணத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். திருமண மண்டபத்தில் வைத்திருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் அடங்கிய பையை காணவில்லை. இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணையில் கோவில்வெண்ணியைச் சேர்ந்த புருஷோத்தமனை கைது செய்து, நகை, பணத்தை மீட்டனர்.
Similar News
News March 13, 2026
பெட்ரோல் குறித்து தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பீதியில் பெட்ரோல், டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம் எனவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!