News April 12, 2025
தஞ்சை: டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் Assistant Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <
Similar News
News April 13, 2025
தஞ்சையில் முருகனுக்கு அறுபடை வீடு இருக்கு! தெரியுமா?

தஞ்சையில் உள்ள முருகனின் அறுபடை வீடு, முதல் படைவீடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், அலங்கம். இரண்டாம் படைவீடு: சுப்பிரயமணிய சாமி கோயில், பூக்கார தெரு. மூன்றாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில் சின்ன அரிசிக்கார தெரு. நான்காம் படைவீடு: சுவாமிநாத சுவாமி கோயில், ஆட்டுமந்தை தெரு. ஐந்தாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில், குறிச்சி தெரு கீழவாசல். ஆறாம் படைவீடு: பால தண்டாயுதபாணி சுவாமி கோயில், வடக்கு அலங்கம்.
News April 13, 2025
தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்

தஞ்சாவூர் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் வருகிற 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்தந்த கோட்டத்தில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதார் அட்டை திருத்தம், பெயர் மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News April 13, 2025
தஞ்சையில் கொளுத்தும் வெயில்

தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்போதே வெயிலில் தாக்கம் சதத்தை அடித்து விட்டது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வீட்ற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் இந்த வெப்ப தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.