News November 15, 2025
தஞ்சை: சிறுமிக்கு பாலியல் தொல்லை-ஒருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் வடக்கு தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் (40), அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், ஆடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு, கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 15, 2025
தஞ்சை: 31,000 கிலோ உரங்கள் பறிமுதல்

புதுப்பட்டினம் பகுதியிலுள்ள கிடங்கில் வேளாண் துறை உதவி இயக்குநர் செல்வராசு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில் 30 ஆயிரத்து 970 கிலோ குருணை வடிவிலான உரமும், அரை லிட்டர், ஒரு லிட்டா் பாட்டில்களில் திரவ வடிவில் 550 லிட்டர் உரங்களுக்கு உரிமம் பெறப்படவில்லை என்பதால் காவல் நிலையத்தினர் முன்னிலையில் ரூ.62.25 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள், உர பாட்டில்களை இயக்குநர் செல்வராசு பறிமுதல் செய்து, சீல் வைத்தார்.
News November 15, 2025
தஞ்சை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு மற்றும் 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 15, 2025
சம்பா பயிர் நடவு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பயிர் நடவுபணி முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


