News November 7, 2025

தஞ்சை: சாலை விபத்தில் துடிதுடித்து பலி!

image

பேராவூரணி அருகே சின்ன ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த சுந்தரவடிவேல் டூவீலரில் கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் கடை வீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், வழியில் மீன் ஏற்றி வந்த மினி லாரி, சுந்தரவடி வேல் மீது மோதியதில், அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 29, 2026

தஞ்சை: போஸ்ட் ஆபீஸ் வேலை – தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE.<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 29, 2026

தஞ்சை: வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

image

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (49). இவர் பெயிண்டிங் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுத்தரமகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 29, 2026

தஞ்சை: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவச்சத்திரம், கும்பகோணம் நகர்ப்புறம், பட்டுக்கோட்டை நகர்ப்புறம், ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 31ம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!