News September 22, 2025

தஞ்சை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

தஞ்சை மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News September 22, 2025

தஞ்சை: நவராத்திரியில் செல்ல வேண்டிய கோவில்கள்!

image

கண்டியூர் கிழக்கே உள்ள திருவேதிக்குடியில் பிரசித்தி பெற்ற வேதபுரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இங்கு அம்மன் வலது புறமும் சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீசுவரரைக் காணலாம். கூடுதலாக இங்குள்ள மூலவரை நவராத்திரி தினத்தன்று எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும், திருமண வரன், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

News September 22, 2025

தஞ்சை: 810 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

image

தஞ்சாவூர் விளார் சாலையில், தஞ்சாவூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகள் ஏற்றிச் செல்லும் வேனில் 810 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை கடத்திய குமரன், நிஜாத்ஜாபர், பாலாஜி 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 810 கிலோ ரேஷன் பறிமுதல் செய்யப்பட்டன.

News September 22, 2025

தஞ்சை: வங்கியில் வேலை.. ரூ.80,000 சம்பளம்!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

error: Content is protected !!