News January 5, 2026
தஞ்சை: கோயில் வாசலில் கிடந்த சடலம்

தஞ்சாவூர் மாவட்டம், மாறனேரி திரௌபதி அம்மன் கோயில் வாசலில் இறந்த நிலையில் கிடந்த முதியவரின் சடலத்தை பூதலூர் போலீசார் மீட்டனர். கிராம நிர்வாக அலுவலரின் புகாரைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என அடையாளம் காணப்பட்டது. இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 6, 2026
தஞ்சை: ரூ.3 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1146
3. சம்பளம்: ரூ.51,000 முதல் ரூ.3,00,000
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 6, 2026
தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூரில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குறைகளைக் கேட்டறியும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், ஜனவரி 8ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட குறைகள் மற்றும் ஆலோசனைகளை நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 6, 2026
தஞ்சை: வெளுத்து வாங்க போகும் மழை…

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மிக கனமழையும், ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


