News December 17, 2025
தஞ்சை: கிரேன் மோதி பரிதாப பலி!

ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் ஏலம்பாள் (75), இவர் நேற்று காலை வீட்டில் இருந்து நடந்து கடைக்கு சென்று உள்ளார். அப்போது ரோட்டை கடந்து சென்றபோது, தஞ்சையில் இருந்து ஓரத்தநாட்டிற்கு மின்சார பணிக்காக வரவழைக்கப்பட்ட கிரேன் எதிர்பாராதவிதமாக ஏலம்பாள் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News December 19, 2025
தஞ்சை: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
தஞ்சை அருகே தீக்குளித்து தற்கொலை

பூதலூர் பெரியார்புரம் சேவையன் நகர் பகுதியைச் சேர்ந்த முருகராஜ் (34), நண்பருடன் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 19, 2025
தஞ்சை: ஆட்டோ வாங்க 3 லட்சம் உதவி!

தஞ்சை மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.


