News November 8, 2025

தஞ்சை: காவிரியில் குதித்து தொழிலாளி தற்கொலை

image

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை காவிரியில் திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்த பழனிசாமி (45) என்ற ஸ்விட்ச் போர்டு கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கல்லணைக்கு வந்து ஆற்றில் குதித்துள்ளார். இது குறித்து தோகூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 8, 2025

தஞ்சை: 12th போதும்.. வங்கி வேலை!

image

தஞ்சை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 8, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (நவ.07) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

தெரு நாய் கடித்து 50 நாட்டுகோழிகள் உயிரிப்பு

image

கும்பகோணம் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் இவரது வீட்டின் தோட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்த நிலையில், நேற்று இரவு இவரது வீட்டின் தோட்டத்திற்கு புகுந்த தெரு நாய்கள் அங்கிருந்த நாட்டுக் கோழிகளைக் கடித்து குதறின. இதில் 50க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் இறந்த கோழிகளை கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகர்களிடம் காண்பித்து வேதனை அடைந்தார்

error: Content is protected !!