News December 22, 2025

தஞ்சை: கார் மோதி பரிதாப பலி

image

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சோலையப்பன் தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன், வீடு புரோக்கர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, பாபநாசம் அருகே மானாங்கோரை மெயின் ரோட்டில் எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News December 24, 2025

தஞ்சாவூர்: பண கஷ்டத்தை நீக்கும் அற்புத கோயில்!

image

தஞ்சை மக்களே செல்வம் என்பது முக்கியமான ஓன்று. பணக்கஷ்டத்தை நீக்கி செல்வம் அருளும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் நம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. செல்வம் இழந்தவர்கள் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது இப்பகுது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

தஞ்சாவூர்: டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

image

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையைச் செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய தஞ்சாவூர் மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 24, 2025

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் (2/2)

image

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!