News January 10, 2026

தஞ்சை: கடன் பிரச்சனை தீர்க்கும் வைரவர்

image

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ளது அருள்மிகு வைரவன் திருக்கோயில். வேண்டியது நினைத்து சாமிக்கு வஸ்திரம், சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வேண்டினால் கர்மவினைகள் தீர்ந்து விடும், கடன் பிரச்சனை, திருமண தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் வைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

Similar News

News January 11, 2026

தஞ்சை: 510 பேருக்கு பணி நியமன ஆணை

image

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நேற்று நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில் 2,172 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 5 மாற்றுத்திறனாளிகள் உள்பட 510 பேருக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பணி நியமண ஆணைகளை வழங்கினார். மேலும், 355 பேர் இரண்டாம் கட்டத் தேர்வுக்கும், 79 பேர் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News January 11, 2026

தஞ்சை: மளமளவென பற்றி எரிந்த கடை

image

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் பழைய பஸ் நிலையம் அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் திடீரென அவரது கடையிலில் தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

News January 11, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!