News November 16, 2025
தஞ்சை: கஞ்சா விற்ற இளைஞர் கைது

தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த டூவீலர் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்திய லால்குடியை சேர்ந்த ரெனால்டு என்பவரையும் கைது செய்தனர்.
Similar News
News November 16, 2025
தஞ்சை அருகே விபசாரம்: 3 பேர் கைது

ஒரத்தநாடு அருகே வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு ஆண், பெண் மற்றும் புரோக்கராக செயல்பட்ட வீட்டின் பெண் உரிமையாளர் என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News November 16, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் (நவ.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
தஞ்சை: பேங்க் வேலை அறிவிப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள்<


