News March 19, 2024
தஞ்சை: உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.2.70 லட்சம் பறிமுதல்!

தஞ்சை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.70 லட்சம் பறிமுதல் செய்யபட்டுள்ளது. பாலாஜி என்பவர் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆதலால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
தஞ்சை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 142 பேர்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை கால்வாய் பிணம் திண்ணி கால்வாய் என அழைக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நீச்சல் தெரியாமல் ஆர்வத்துடன் தண்ணீருக்குள் இறங்கி குளிக்கும்போது. இழுத்து செல்லப்படுகின்றனர். விழிப்புணர்வு தந்திருந்தாலும் பலரும் கேட்காமல் இங்கு குளிப்பதால் பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 142 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News January 1, 2026
தஞ்சை மாவட்டத்தில் 1,566 பேர் மீது 1,173 வழக்குகள் பதிவு

தஞ்சை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான குற்றம் செய்ததாக 1,566 பேர் மீது 1,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 260 லிட்டர் சாராய ஊறல், 290 லிட்டர் சாராயம், 201 லிட்டர், 5,610 லிட்டர் மது மற்றும் 762 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் கடத்தியதாக 775 பேர் கைது செய்யப்பட்டு 702 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
News January 1, 2026
தஞ்சை: 690 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு!

தஞ்சை காவல் சரகத்திற்குட்பட்ட தஞ்சை, திருவாருர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில், கைப்பற்றப்பட்ட 690.54 கி கஞ்சா நீதிமன்ற உத்தரவு பெற்று அழிக்கப்பட்டது. தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஜியாவுல்ஹக் தலைமையில், இன்று செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கஞ்சா போதைப் பொருட்களை தீயிட்டு அழிக்கப்பட்டது.


