News May 12, 2024
தஞ்சை: ஆர்ப்பாட்டம் நடத்திய 65 பேர் கைது

நிற வெறியை தூண்டும் விதமாக பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் தஞ்சை தலைமை தபால் அலுவலகம் அருகே பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 27, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.26) இரவு 10 மணி முதல் இன்று(செப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 26, 2025
தஞ்சாவூர்: கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

கடந்த 2022ம் வருடம் கும்பகோணம் மினி பேருந்து நிற்கும் இடத்தில் நடந்த தகராறில், மாதுளம் பேட்டையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை, தினதயாளன் என்பவர் கொலை செய்தார். இந்த வழக்கில் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி, தீனதயாளனுக்கு 5 வருட சிறைதண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
News September 26, 2025
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள், பருவ கால பணியாளர்கள், கொள்முதல் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.