News January 2, 2026
தஞ்சை: ஆயுளை நீடிக்கும் விஜயநாதேஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிஜயமங்கலத்தில் விஜயநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News January 6, 2026
தஞ்சை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

தஞ்சை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா?. இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News January 6, 2026
தஞ்சை: கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

கும்பகோணத்தில் கடந்த 2019-ஆண்டு பணம் கொடுக்கல், வாங்கலில் அருண் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்குமார், வெங்கடேசன், சந்திரசேகரன், கதிர், பாலகுரு உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News January 6, 2026
தஞ்சை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூரில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குறைகளைக் கேட்டறியும் கூட்டம் வரும் ஜன.8-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் தொடர்பான தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


