News September 3, 2025
தஞ்சை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் வருகின்ற வெள்ளிக்கிழமை, 05.09.2025 அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு மூடப்படும். அன்று மதுபானம் விற்பனை செய்யப்படாது மீறி விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள்

தஞ்சாவூரில் இயங்கி வரும் துணை மின் நிலையங்களில் நாளை செப்.06 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் ⏩தஞ்சாவூர், ⏩பாபநாசம், ⏩அய்யம்பேட்டை, ⏩மெலட்டூர், ⏩சாக்கோட்டை, ⏩கும்பகோணம் ரூரல்,⏩ பூண்டி, ⏩சாலையாமங்கலம், ⏩திருப்புறம்பியம் ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரவு மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் SHARE பண்ணுங்க!
News September 5, 2025
தஞ்சாவூர் விவசாயிகளுக்கு Good News!

தஞ்சாவூர், திருவோணம் வட்டாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சிறு, குரு விவசாயிகள் அனைவருக்கும் மண்புழு உர தொட்டி அரசு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதனை ரூ.540 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஆதார், கணினி சிட்டா, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் வேளாண்துறையை அணுகி பெற்று கொள்ளலாம் என திருவோணம் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மற்றவர்களும் SHARE பண்ணுங்க!
News September 5, 2025
முதல்வர் குறித்து அவதூறாக பேசியவர் கைது

திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் (ம) அவரது குடும்பத்தினரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசி, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்து திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சிற்றம்பலம் போலீசார் கைது செய்தனர்.