News May 28, 2024
தஞ்சை அருகே விபத்து- 10 பேர் காயம்

பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று 2தனியார் பேருந்துகள் பயணிகளுடன் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றது. பயணிகளை அதிகமாக ஏற்றுவது என்பதில் இரு பேருந்து டிரைவர்களுக்கும் இடையே போட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரத்தநாட்டை அடுத்துள்ள சோழகன் குடிக்காடு அருகே சென்ற போது பின்வந்த பேருந்து, முன் சென்ற பேருந்தின் மீது மோதியது. இதில் 10 பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி சோ்க்கை வழிகாட்டும் முகாம்

மாணவா்களுக்கு உயா் கல்வி சோ்க்கையில் ஏற்படும் குறைபாடுகளைக் களைந்து தீா்வு காணும் வகையில், தஞ்சை ஆட்சியரகத்திலுள்ள மக்கள் குறைதீர் கூட்டரங்கத்தில் நாளை (ஆக.22) காலை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி குறைதீர் முகாம் நடைபெற உள்ளது
என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
தஞ்சை: விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி கட்டாயம்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.20) நடைபெற்றது. இதில், விநாயகா் சதுா்த்தியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய கோட்டாட்சியரின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
News August 21, 2025
தஞ்சை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<