News March 30, 2024
தஞ்சை அருகே ரேஷன் அரிசி கடத்தல்

தஞ்சையை அடுத்த மேலவஸ்தாசாவடி, ராவுசாப்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வினோத் என்ற நவநீதகிருஷ்ணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 15, 2026
தஞ்சை: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

தஞ்சை மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதற்கு சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!
News February 15, 2026
தஞ்சை: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு வருகிற 18-ம் தேதி தொடங்குகிறது. தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News February 15, 2026
தஞ்சை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


