News October 17, 2025
தஞ்சை: அரசு மதுபான கடையை உடைத்து திருட்டு

பரக்கலக்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் அரசு மதுக்கடை வயல்வெளிக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கடை விற்பணை முடித்து கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், நேற்று கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு ரூ.15,000 மற்றும் 96 மதுபாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Similar News
News October 18, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 17, 2025
தஞ்சாவூர்: ரூ.29,000 சம்பளம்.. மத்திய அரசு வேலை!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 17, 2025
தஞ்சை: சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி பலி

நரசிங்கன்பேட்டையில் இன்று காலை பொள்ளாச்சியில் இருந்து திருக்கடையூர் சென்ற கார் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த சுப்பிரமணியன் இவரது மனைவி கலாவதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் திருக்கடையூரில் 60ம் கல்யாணம் நடைபெற இருந்த நிலையில் இருவரும் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.