News December 14, 2025
தஞ்சை: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

தஞ்சை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News March 2, 2026
தஞ்சை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

தஞ்சை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 2, 2026
தஞ்சை: மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

தமிழகத்தில் இன்று (02.03.2026) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதை முன்னிட்டு, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும் என்றும், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
News March 2, 2026
தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான, மார்ச் மாத ரேஷன் பொருட்கள், இன்று மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், நேரடியாக வீடுகளுக்கே வந்து விநியோகம் செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 1,183 நியாய விலைக் கடைகள் மூலம் 48,817 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.


