News October 26, 2025
தஞ்சை: அனைத்து டிபிசிகளுக்கும் விடுமுறை ரத்து!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாலும் – ஏற்கனவே நெல்லை கொண்டு வந்து விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் காத்திருப்பதாலும் இன்று (அக்.26) ஞாயிற்றுக்கிழமை அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் விடுமுறையின்றி செயல்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
Similar News
News October 28, 2025
தஞ்சை: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறை வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 28, 2025
தஞ்சாவூர்: இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை!

ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரை கடந்த 2024-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மருமகன் ராஜ்குமார் (ம) அவரது நண்பர் சரவணகுமார் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
News October 28, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


