News November 14, 2024

தஞ்சையில் 589 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் வருகிற 23ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளின் நடைபெற உள்ளது. கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் இணைந்து ஆலோசிக்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News August 21, 2025

தஞ்சாவூர்: தமிழ்நாடு காவல்துறையில் வேலை!

image

தஞ்சாவூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம். போலீஸ் ஆகவேண்டுமென லட்சியம் உள்ளவர்களுக்கு SHARE பண்ணு

News August 21, 2025

தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி சோ்க்கை வழிகாட்டும் முகாம்

image

மாணவா்களுக்கு உயா் கல்வி சோ்க்கையில் ஏற்படும் குறைபாடுகளைக் களைந்து தீா்வு காணும் வகையில், தஞ்சை ஆட்சியரகத்திலுள்ள மக்கள் குறைதீர் கூட்டரங்கத்தில் நாளை (ஆக.22) காலை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி குறைதீர் முகாம் நடைபெற உள்ளது
என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

தஞ்சை: விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி கட்டாயம்

image

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.20) நடைபெற்றது. இதில், விநாயகா் சதுா்த்தியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய கோட்டாட்சியரின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

error: Content is protected !!