News March 15, 2025
தஞ்சையில் வேலைவாய்ப்பு, ரூ.75,000 வரை சம்பளம்

ECHS தஞ்சாவூரில் DEO, Peon, Medical Officer ஆகிய பணிகளுக்கு 6 காலியிடங்கள் உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (மா.15) கடைசி நாளாகும். ரூ.16,800 முதல் ரூ.75,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான முழு விவரம் அறிய <
Similar News
News March 15, 2025
இளைஞர் கொலை வழக்கு, 16 ஆண்டுக்கு பிறகு தண்டனை

தாராசுரம் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன், கடந்த 2009 ஆம் ஆண்டு பணம் கொடுக்கல் – வாங்கல் பிரச்சினையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா கொலை வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், பாண்டி ஆகிய 4 பேருக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதித்து, தலா ரூ. 3000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News March 14, 2025
தஞ்சை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற Way2News!

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், Way2News சார்பில் சுரேஷ், சிங்காரவேலு, மதன் ஆகியோர் கலந்து கொண்டு தஞ்சை பகுதியைச் சேர்ந்த சுமார் 8 இளைஞர்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி ஆணை, மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் பரமேஸ்வரி தலைமையில் வழங்கப்பட்டது.
News March 14, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில் மார்ச்.18ஆம் தேதி கும்பகோணத்திலும், 25ஆம் தேதி பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள கிராம சபை கட்டடத்திலும் நடைபெற உள்ளது. தகுதி உடையவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.