News October 30, 2024
தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விபரங்களுக்கு 94433 31190 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 19, 2024
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மூன்று மாத காலம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 19, 2024
குறுந்தொழில் தொடங்க கலைஞர் கடனுதவி
கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் புதிய மற்றும் ஏற்கனவே இயங்கிவரும் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் லட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதனக் கடன்கள், அசையா சொத்து அடமானத்தின் பேரில் கடன் உதவி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கும் நிறுவனங்களுக்கு தொழிற்கூடம் கட்டுவதற்கும், இயந்திரங்கள் வாங்கவும் கடன் வழங்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 19, 2024
தஞ்சை: கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது
பாப்பாநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த நவ.12-ஆம் தேதி போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்ததில் சிவக்குமார் மற்றும் வைரதேவன் ஆகியோரிடமிருந்து 5.29 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், இருவரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.