News March 29, 2025

தஞ்சையில் மாநகரட்சி கூட்டம், பாதியிலேயே கிளம்பிய மேயர்

image

தஞ்சையில் பட்ஜெட் கூட்டம், நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர் சரவணன் திருவோடு ஏந்தி சாமியார் தோற்றத்தில் பங்கேற்றார். கவுன்சிலர் சரவணன், தஞ்சை மாநாட்டு அரங்கு திரையரங்கமாக மாற்றப்பட்டு தனியாருக்கு விட்டதில் ரூ.1 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்கு மேயர் பதிலளிக்க வேண்டும், என கேள்வி எழுப்பினார். அதற்கு மேயர் ராமநாதன் பதிலளிக்காமல் அரங்கை விட்டு சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Similar News

News September 17, 2025

தஞ்சை மாவட்ட வளர்ச்சி பணி ஆய்வு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் இன்று (செப்.17) நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம். அரவிந்த் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டது.

News September 17, 2025

தஞ்சை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <>myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid <<>>என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 17, 2025

ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.17) தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க. கண்ணன் ஆகியோர் இருந்தனர்.

error: Content is protected !!