News August 25, 2025
தஞ்சையில் மக்கள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று(ஆக.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட 432 புகார் மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 26, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
தஞ்சை: ஆயுதத் தொழிற்சாலையில் வேலை! சூப்பர் வாய்ப்பு!

தஞ்சை மக்களே… திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் <
News August 25, 2025
மாணவனுக்கு உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவி தொகையாக ரூ.50,000 காசோலையை, பேராவூரணி வட்டம் முடப்புளிக்காடு பகுதியை சேர்ந்த ஹரி என்பவருக்கு தொழிற்கல்வி படிப்பதற்காக வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கலந்து கொண்டனர்.