News April 5, 2024
தஞ்சையில் திமுக கொடிகள் அகற்றம்

தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(ஏப்.4) பிரசாரம் செய்தார். இதற்காக திமுக சார்பில் வரவேற்க அண்ணாசாலை, பனகல் கட்டடம் சாலையில் திமுக கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இதற்கு உரிய அனுமதி பெறாமல், தேர்தல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததால் திமுக மற்றும் கூட்டணி கட்சி கொடிகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
Similar News
News February 18, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 6 ஒன்றியங்களில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு வியாழக்கிழமைக்குள் (பிப்.19) விண்ணப்பிக்கலாம். என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
News February 18, 2026
தஞ்சை: கடற்படையில் வேலை-APPLY NOW!

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 18, 2026
தஞ்சை மக்களே இது முற்றிலும் இலவசம்!

தஞ்சை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <


