News October 26, 2024
தஞ்சையில் தபால் குறைதீர் கூட்டம்

தஞ்சை கோட்ட முதல்நிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சையில் தபால் குறைதீர் கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. தஞ்சை தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், தபால்துறை சார்ந்த குறைகள் இருப்பின் பொதுமக்கள் நேரடியாக குறைதீர் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அதன் நகர்ப்புற பகுதிகளான கீழவாசல், வண்டிக்கார தெரு மற்றும் பழைய பேருந்து நிலையம் போன்ற நகரங்களின் முக்கியமான பகுதிகளில் நாளை (பிப்.17) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று மின்வாரியம் சார்பாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 16, 2026
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் 17.02.2026-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் இந்த முகாமில் ஒன்று முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.” என்று அறிவித்துள்ளார்.
News February 16, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 முதல், இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


