News November 21, 2024
தஞ்சையில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு மழை பெய்து வரும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
Similar News
News December 11, 2025
தஞ்சை: கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு மது போதையில் முனியாண்டி என்பவர் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் முனியாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி முனியாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று (டிச.10) தீர்ப்பளித்தார்.
News December 11, 2025
தஞ்சை: பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு சிறை!

அய்யம்பேட்டை கடந்த 2022-ம் வருடம் 15 வயது சிறுமிக்கு பள்ளி ஆசிரியரான பாலசுப்பிரமணியம் பள்ளியில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக அவரது அம்மா பாபநாசம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் பாலசுப்பிரமணியம் கைது செய்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தஞ்சாவூர் POCSO நீதிமன்ற குற்றவாளி பாலசுப்பிரமணியம் 3 வருட கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
News December 11, 2025
தஞ்சை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் இன்று (டிச.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


