News December 16, 2025
தஞ்சையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வடவாறு பாலம் அருகே சுற்றித் திரிந்த திவாகர், புருஷோத்தமன், ஷ்யாம் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 18, 2025
தஞ்சை: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை 19/ 12/ 2025 காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News December 18, 2025
தஞ்சை அருகே கிரேன் மோதி மூதாட்டி பலி

ஒரத்தநாடு தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த ஏலாம்பாள். தனது வீட்டில் இருந்து நடந்து கடைக்குச் சென்றபோது, ஒரத்தநாட்டிற்கு மின்சாரப் பணிக்காக வரவழைக்கப்பட்ட கிரேன் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 18, 2025
தஞ்சை: 10th போதும் அரசு வேலை ரெடி!

தஞ்சை மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28,OBC–26)
5. கடைசி தேதி : 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் உதவுங்க.


