News October 3, 2024
தஞ்சையில் ஒரே நாளில் சிக்கிய ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் விதமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் போலீசாரால் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் மதுபானம் விற்பனை செய்த 49 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 40 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2394 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்ததாக எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
கும்பகோணத்தில் மகாமகம் பெருவிழா முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

கோவில் நகரமான குடந்தையில் நடைபெற இருக்கும் புகழ் பெற்ற விழாவான மகாமகம் திருவிழா 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அந்த விழாவிற்கு தேவையான முன்னேறுபாடுகள் பற்றி இன்று (ஆகஸ்ட் 13) கும்பகோணம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை கலெக்டர். பிரியங்கா பங்கஜம் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.
News August 13, 2025
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது

தஞ்சாவூர் மாதாகோட்டையில் இருசக்கர வாகனம் மீது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கார் மோதியதில் தஞ்சை சேர்ந்த அறிவழகன், பவ்யா ஸ்ரீ, தேஜா ஸ்ரீ ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் முகமது ரியாஸ் (32) என்பவரை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.