News November 11, 2024

தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் குறை தீர்ப்பு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று 11.11.2024 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர். பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Similar News

News December 9, 2025

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

News December 9, 2025

தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை பெற வருகிற 31ம் தேதி வரை பூர்த்தி செய்த விண்ணங்களை அளிக்கலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

News December 9, 2025

தஞ்சாவூரில் 30 பேர் கைது

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கும் வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாபநாசத்தில் இருந்து சென்னைக்கு பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் வேனில் புறப்பட தயாராக இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

error: Content is protected !!