News November 22, 2024
தஞ்சையில் ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News December 20, 2025
தஞ்சை: சுற்றுலா வந்த சொகுசு பேருந்து விபத்து

வல்லம் அருகே இன்று காலை கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு 50க்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகளுடன் வந்த சொகுசு பேருந்து, ஜல்லி ஏற்றிக்கொண்டு சென்ற லாரியின் பின் பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News December 20, 2025
தஞ்சாவூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: [<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
தஞ்சை: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு

திருவையாறு அருகே அரசகுடியை சேர்ந்த ரெங்கராஜ் (85) வயது முதிர்வால் காலமானார். இந்நிலையில், அவரது மனைவி மரகதம் (75), கணவர் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் நேற்று உயிரிழந்தார். இருவரது உடல்களும் அருகருகே வைத்து ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. மனம் ஒத்த தம்பதிகள் ஒரே நாளில் பிரிந்தது கிராம மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


