News December 14, 2025

தஞ்சைக்கு ரயில் மூலம் 1,228 டன் உரம் வருகை

image

தஞ்சாவூரில் சம்பா -தாளடி சாகுபடி முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் வரவழைக்கப்பட்டு, தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, சென்னையிலிருந்து சரக்கு ரயிலில் 1,228 டன் யூரியா உர மூட்டைகள் தஞ்சை ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தன. பின்னர், உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியார் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Similar News

News December 16, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான சிதம்பரம், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிதம்பரம், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!