News April 27, 2024
தஞ்சாவூர் வெப்பநிலை விவரம்

தஞ்சாவூரில் நேற்று (ஏப்.26) 102.2 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 12, 2026
தஞ்சை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டுகோட்டை, ஒரத்தநாடு பேராவூரணி, பாபநாசம் வருவாய் அலுவலகத்திலும் இன்று (மார்ச் 12) நடைபெறும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட முகாம்களில், பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News March 12, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் (மார்ச்.11) இரவு 10 முதல் இன்று (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 11, 2026
தஞ்சை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT


