News April 24, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை

image

தென் இந்தியப்ப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடுகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 30, 2026

தஞ்சாவூரில் VAO-க்கள் போராட்டம்

image

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர், இணைய வசதிகளை ஏற்படுத்தி நவீனமயமாக்க வேண்டும், டிஎன்பிஎஸ்சி நேரடி நியமனத்திற்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

News January 30, 2026

தஞ்சாவூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

தஞ்சாவூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல் APP-ஐ <<>>அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 30, 2026

தஞ்சாவூர்: கிலோ கணக்கில் போதை பொருள் – 3 பேர் கைது

image

த்ஞ்சாவூர் மாவட்டம் மணத்திடல் ராமலிங்கம் என்பவர் பெட்டி கடையில் போதைபொருள் விற்பனை செய்வதாக மருவூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சோதனை செய்த போலீசார் ராமலிங்கம், நாமக்கலைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் சபரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 115 கிலோ குட்கா, 1 நான்கு சக்கர வாகனம், 1 இரு சக்கர வாகனம், 4 செல்போன்கள் மற்றும் ரு.63,290 பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!