News September 27, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் குரூப்.2 தேர்வு

image

தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய 5 வட்டங்களில் 56 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் (செப் 29) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 ஆயிரத்து 332 தேர்வர்கள் எழுதவுள்ளனர். தேர்வு கூடத்துக்கு காலை 9 மணிக்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 8, 2026

தஞ்சை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News January 8, 2026

தஞ்சை மாவட்ட கலெக்டர் தகவல்!

image

போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக், ரப்பர், டயர் போன்ற பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் பாதிப்பு ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 8, 2026

தஞ்சை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தஞ்சை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <>இங்கு கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!