News March 25, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் மார்ச்.22ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற இருந்தது. ஒரு சில நிர்வாக காரணங்களால் நடைபெறாமல் போனது. இந்நிலையில் வரும் மார்ச்.29ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். கிராம மக்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News October 28, 2025
தஞ்சை: கணவனுக்கு தண்டனை-மனைவி தற்கொலை

தஞ்சாவூரில், கொலை வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் மனமுடைந்த மனைவி ராஜராஜேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணின் கணவனுக்கு அக்.17 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News October 28, 2025
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம்

வருகின்ற அக்.30 அன்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள், தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கம் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
தஞ்சை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


