News September 10, 2025
தஞ்சாவூர் மக்களே இன்று மிஸ் பண்ணாதீங்க!

தஞ்சாவூர் மக்களே அவங்க மறுபடியும் வராங்க! புரியலையா? உங்கள் கோரிக்கைகளை உங்கள் ஊருக்கே வந்து நிவர்த்தி செய்யும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நமது தஞ்சையில் 09.09.2025 இன்று எங்கே நடக்குதுனு தெரிஞ்சிக்கோங்க! ⏩தஞ்சாவூர், மாநகராட்சி ⏩பட்டுக்கோட்டை ⏩ஒரத்தநாடு ⏩திருமங்கலக்கோட்டை ⏩கும்பகோணம் , ⏩பட்டீஸ்வரம் ⏩அம்மாபேட்டை ⏩திருக்கருக்காவூர் ⏩பேராவூரணி ⏩களத்தூர்
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 10, 2025
தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் மணக்கரம்பை ஊராட்சி ஆதிதிராவிடர் நல அரசினர் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களின் கல்வித்தரம் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு அதிகாரிகள் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளனர்.
News September 10, 2025
கிருஷ்ணாபுரத்தில் அமைச்சர் கோவி செழியன் பேட்டி

ஆளுநர் ஒப்புதல் தரவேண்டிய, கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு, ஒப்புதல் தராமல், பல மாதங்கள் கிடப்பில் போட்டு, அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பியிருப்பதன் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தையும், தமிழ் மக்களையும் வஞ்சிக்கிறார் என்பதும், தமிழக உயர்கல்வி முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது என இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி.
News September 10, 2025
தஞ்சை: பள்ளி வாகனத்தில் நேருக்கு நேர் மோதிய டெம்போ

இன்று காலை அதிராம்பட்டினம் TO முத்துப்பேட்டை செல்லக் கூடிய வழியில் தம்பிக்கோட்டை அருகே பள்ளி வாகனம் மற்றும் டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி வாகனம் குழந்தைகளை ஏற்றச் சென்றதால் அந்த வாகனத்தில் குழந்தைகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்ட்டது,. இருந்தபோதிலும் டிரைவருக்கு மற்றும் டெம்போ டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.