News December 12, 2025
தஞ்சாவூர்: போலி IAS அதிகாரி கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திட்ட இல்லத்தில் ஓய்வு பெற்ற IAS அதிகாரி என்று அறிமுகம் ஆகி பலமுறை இலவசமாக சென்னை தியாகராய நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தங்கிச்சென்றுள்ளார். இவர் மீது திட்ட இல்லத்தில் பணிபுரியும் காப்பாளர் பாஸ்கர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Similar News
News April 3, 2026
தஞ்சை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

கோடைக் காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சியில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.
News April 3, 2026
தஞ்சை மாவட்டத்தில் 28 பேர் வேட்புமனு தாக்கல்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் இரண்டாம் நாளான நேற்று 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்க நாளான மார்ச் 30ம் தேதி 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதும் மொத்தம் 28 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
News April 3, 2026
தஞ்சை: காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திமுக-வுக்கு ஆதரவு

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக ஆர். வைத்திலிங்கம் போட்டியிட உள்ளார். இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ். பழனியப்பன், அவரை ஒரத்தநாட்டில் சந்தித்து, சங்கத்தின் ஆதரவை தெரிவித்துக் கொண்டார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


