News January 2, 2026

தஞ்சாவூர்: பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு!

image

தமிழக அரசால் ஆண்டுதோறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமில்லாமலோ அல்லது சரியாக வந்து சேரவில்லை என்றால் ‘1800 425 5901’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு அலைச்சல் இல்லாமல் உங்களால் புகார் அளிக்க முடியும். மேலும் இந்த எண்ணின் மூலமாக ரேஷன் கடை மற்றும் ரேஷன் பொருட்கள் குறித்தும் நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 8, 2026

தஞ்சை மாவட்ட கலெக்டர் தகவல்!

image

போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக், ரப்பர், டயர் போன்ற பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் பாதிப்பு ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 8, 2026

தஞ்சை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தஞ்சை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <>இங்கு கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

தஞ்சாவூரில் வேலை வாய்ப்பு முகாம்

image

தஞ்சாவூரில் அமைந்துள்ள சரபோஜி கல்லூரியில் வருகின்ற சனிக்கிழமை (ஜனவரி 10) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8 மணியளவில் மன்னர் சரபோஜி கல்லூரியில் தனியார் துறையை சார்ந்த பல நிறுவனங்கள் வருகை புரிந்து நேர்காணல் மூலமாக நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வேலை தேடும் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!