News December 23, 2025

தஞ்சாவூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

image

தஞ்சாவூர் மக்களே.. அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்.! அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி பணத்தை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.

Similar News

News January 9, 2026

தஞ்சாவூர்: டாக்டர் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு

image

தஞ்சை பரிசுத்தம் நகரைச் சேர்ந்த மருத்துவர் மணி, தனது வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி உமாவுடன் ஒரத்தநாட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர். திரும்பி வந்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து தஞ்சை தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 9, 2026

தஞ்சாவூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.

News January 9, 2026

பெண்ணைத் தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

image

சுவாமிமலை அருகே பொதுப்பாதை தகராறில் கடந்த 21-11-2017 அன்று பூங்கொடி என்ப்வர் வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ரவி என்பவர் ஆபாசமாக பேசி கல்லால் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெண் தாக்கப்பட்ட வழக்கில், கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம்-2 நீதிபதி பாலதண்டாயுதம், பெண்ணை தாக்கிய ரவிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

error: Content is protected !!