News August 30, 2025
தஞ்சாவூர்: பாலியல் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி மாதவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News August 30, 2025
தஞ்சை: உங்கள் நிலத்தை கண்டுபிடிக்க எளிய வழி

தஞ்சை மக்களே, நீங்கள் வாங்கிய நிலம் அல்லது உங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலங்களின் பத்திரங்கள் கையில் இருந்தும், நிலம் சரியாக எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் நிலங்களை கண்டுபிடிக்க இங்கே <
News August 30, 2025
தஞ்சையில் 2,210 மெட்ரிக் டன் விதை நெல் இருப்பு- ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா தாளடி சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு விதை நெல் தயார் நிலையில் உள்ளது. வேளாண் விரிவாக்க மையங்களில் 410 மெட்ரிக் டன் விதை நெல்லும் – தனியார் விற்பனை நிலையங்களில் 1,800 மெட்ரிக் டன் விதை நெல்லும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
News August 30, 2025
தஞ்சாவூர் ஜில்லாவின் நினைவு சின்னங்கள் தெரியுமா?

நம்ம தஞ்சாவூர் என்று சொன்னாலே பெருமைக்கு பஞ்சம் இருக்காது. அப்படியாப்பட்ட தஞ்சாவூரில் வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னங்கள் இருப்பது பற்றி தெரியுமா?
✅தஞ்சை கோட்டை
✅தஞ்சை வீணை
✅தஞ்சை அகழி
✅தேர் நிறுத்தம்
✅தஞ்சை நால்வர்
✅கல்யாண சுந்தரம் பள்ளி
✅தாணிய களஞ்சியம்
✅சங்கீத மஹால்
✅சரஸ்வதி மஹால்
நம்ம தஞ்சைக்கு கிடைத்த இந்த பெருமைகளை நாம்தான் எடுத்து சொல்லனும்! மற்றவர்களும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!