News December 17, 2025

தஞ்சாவூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் <>TamilNilam Geo-Info <<>>என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும். பின்னர் நிலம் உள்ள மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்தால், நிலத்தின் பட்டா விவரம், FMB, இருப்பிடம் உள்ளிட்ட பல விவரங்களையும் அறிய முடியும். இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News December 20, 2025

தஞ்சை: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு

image

திருவையாறு அருகே அரசகுடியை சேர்ந்த ரெங்கராஜ் (85) வயது முதிர்வால் காலமானார். இந்நிலையில், அவரது மனைவி மரகதம் (75), கணவர் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் நேற்று உயிரிழந்தார். இருவரது உடல்களும் அருகருகே வைத்து ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. மனம் ஒத்த தம்பதிகள் ஒரே நாளில் பிரிந்தது கிராம மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

News December 20, 2025

தஞ்சை: பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம்!

image

தஞ்சை மாவட்ட பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 20, 2025

தஞ்சை: கல்லூரி பேருந்து மோதி உயிரிழப்பு

image

செங்கிப்பட்டி அருகே திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த கல்லூரி பேருந்து சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!