News September 6, 2025

தஞ்சாவூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

image

தஞ்சை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04362 231045 அணுகலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News September 6, 2025

நம்மாழ்வார் விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு

image

இயற்கை முறையில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குநர் கோ.வித்யா தெரிவித்துள்ளார். இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக 2025 – 26 ஆம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கி ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என தெரிவித்தார். SHARE IT

News September 6, 2025

செப் 9 தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

image

தஞ்சை ஆட்சியரகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செப் 9 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெறுகிறது,. மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

தஞ்சை மாவட்டத்தில் இன்று பவர் கட் !

image

தஞ்சாவூரில் இயங்கி வரும் துணை மின் நிலையங்களில் இன்று செப்.06 ஆம் தேதி
⏩தஞ்சாவூர்,
⏩பாபநாசம்,
⏩அய்யம்பேட்டை,
⏩மெலட்டூர்,
⏩சாக்கோட்டை,
⏩கும்பகோணம் ரூரல்,
⏩ பூண்டி,
⏩சாலையாமங்கலம்,
⏩திருப்புறம்பியம்
ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!