News January 9, 2025
தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு வாரம் பேரணி

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து 36 வது ஆண்டு சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய மாபெரும் சாலை பாதுகாப்பு பேரணியை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பூரண ஜெய ஆனந்த் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் காவல்துறையினர் வழக்கறிஞர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 26, 2026
தஞ்சை மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

1. தஞ்சை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 26, 2026
தஞ்சை கலெக்டர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம், 2026 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கான கால அளவை ஜனவரி 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், இந்த கால நீட்டிப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
News January 26, 2026
தஞ்சை மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

தஞ்சை மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் காவல் நிலையத்திற்கு இனி புகார் அளிக்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக குடும்ப அட்டை , பான் கார்டு , ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் என மேற்கண்ட அரசு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிறருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!


