News March 20, 2024
தஞ்சாவூர் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு தஞ்சாவூர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News December 30, 2025
தஞ்சை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

தஞ்சை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.
News December 30, 2025
தஞ்சை: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News December 30, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு 10 முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


