News March 22, 2024
தஞ்சாவூர் திமுகவில் உட்கட்சி பூசல்?

தஞ்சை மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் தீவிரம் அடைந்திருப்பதால், மு.மத்திய அமைச்சரும் தற்போதைய எம்பியுமான பழனி மாணிக்கத்திற்கு 2024 மக்களவை தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இந்த தேர்தலில் திமுக தஞ்சை தொகுதி வேட்பாளராக வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலியை திமுக தலைமை அறிவித்துள்ளது. இதனால் பழனி மாணிக்கம் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Similar News
News April 10, 2025
தஞ்சையில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் நாளை (வியாழன்) அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்றுள்ள மதுபான கடைகளும், மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 10, 2025
தஞ்சையில் முதலைகள் பாதுகாப்பு மையம், அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தஞ்சை மாவட்டம் அணைக்கரை பகுதியில் முதலைகள் அதிகம் இருப்பதால் இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது எனும் காரணத்தினால் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க ரூபாய் 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
News April 9, 2025
கோடி நலம் தரும் தஞ்சை கோடியம்மன் ஆலயம்

தஞ்சை – திருவையாறு செல்லும் வழியில் இந்த கோடியம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்மன் கோடி அவதாரம் எடுத்து அரக்கர்களை வதம் செய்ததால் இந்த அம்மனுக்கு கோடியம்மன் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருமண தடை, மகப்பேறு கிடைக்க பெண்கள் வழிபடுகின்றனர். மேலும் இந்த அம்மனை வணங்கினால் கண் திருஷ்டி, பணக் கஷ்டம் போன்ற அனைத்தும் நீங்கும் என கூறுகின்றனர். இதை SHARE செய்யவும்.