News May 30, 2024
தஞ்சாவூர்: தாய் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை

தஞ்சாவூர், மேலவீதி தெலுங்குசெட்டி தெருவை சேர்ந்த சுகன்யா(36), தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். சுகன்யாவின் தாய் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். இதனால் சில நாட்களாகவே சுகன்யா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(மே 29) இரவு வேலை முடித்து வந்த சுகன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Similar News
News August 21, 2025
தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி சோ்க்கை வழிகாட்டும் முகாம்

மாணவா்களுக்கு உயா் கல்வி சோ்க்கையில் ஏற்படும் குறைபாடுகளைக் களைந்து தீா்வு காணும் வகையில், தஞ்சை ஆட்சியரகத்திலுள்ள மக்கள் குறைதீர் கூட்டரங்கத்தில் நாளை (ஆக.22) காலை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி குறைதீர் முகாம் நடைபெற உள்ளது
என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
தஞ்சை: விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி கட்டாயம்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.20) நடைபெற்றது. இதில், விநாயகா் சதுா்த்தியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய கோட்டாட்சியரின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
News August 21, 2025
தஞ்சை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<