News January 9, 2026
தஞ்சாவூர்: செத்து மிதந்த மீன்கள்

கும்பகோணம், அகராத்தூரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தனக்கு சொந்த இடத்தில் மீன்குட்டை அமைத்து மீன்கள் வளர்த்து வருகிறார். மீன்கள் அனைத்தும் தற்போது வளர்ந்து விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் அவர் குளத்திற்கு சென்ற போது, குளத்தில் மீன்கள் அனைத்தும் செத்து மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News February 6, 2026
தஞ்சை: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

கும்பகோணம் வழியாக திருச்சி – தாம்பரம் இடையே செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் இனி செவ்வாய், புதன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி, இந்த ரயில் இனி 16808 (திருச்சி: 0535 – தாம்பரம்:1230) & 16807 (தாம்பரம்:1530-திருச்சி:2240) ஆகிய எண்களுடன் அதிவிரைவு ரயிலாக இயங்கும்.
News February 6, 2026
தஞ்சை மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT.
News February 6, 2026
தஞ்சை: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு!

மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 – 33 வயதிற்க்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், வரும் மார்ச் 3-ம் தேதிக்குள் <


